Spotlightதமிழ்நாடு

அம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களோடு மக்களாக இருந்து காலை உணவு அருந்தினார்.

பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் பேர் உணவருந்துகின்றனர். அம்மா உணவகங்களில் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது.

தில்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா தொற்று பரவலை தடுக்க முடியும்.’ என்று கூறினார்.

மேலும், சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மெற்கொண்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button