
இந்திய திரையுலகில் “2018: Everyone Is A Hero” என்ற படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த மாலிவுட் ஸ்டார் டோவினோ தாமஸ், நடிகர் திலகம், ARM மற்றும் Itentity ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்த படங்கள் சினிமா ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஜீன் பால் லால் இயக்கத்தில் உருவாக இருக்கும் நடிகர் திலகம் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார் நடிகர் டொவினோ தாமஸ். புதிய கில்லர் லுக்குடன், டோவினோ தாமஸ் வெள்ளை சட்டையிலும், நீண்ட முடியுடன் பார்ட்டி லுக்கில் காணப்படுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளாக்பஸ்டர் திரைப்படம் “டிரைவிங் லைசென்ஸ்” புகழ் இயக்குனர் ஜீன் பால் லால் நடிகர் திலகம் படத்தை இயக்க உள்ளார். இதில் டோவினோ தாமஸ் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக சிக்கல்களைக் கொண்ட சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ, அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா, இந்திரன்ஸ், மதுபால், கணபதி, அல்தாப் சலீம், மணிக்குட்டன், மற்றும் ஸ்ரீஜித் ரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்தில் நடிகை பாவனா நாயகியாக நடிக்கிறார். உப்பேனா மூலம் தேசிய விருதை வென்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படம் மூலம் மலையாள திரை உலகில் கால் பதிக்கின்றது. இப்படத்திற்கு யாக்சன் கேரி பெரேரா மற்றும் நேஹா நாயர் இசையமைக்கின்றனர். ரதீஷ் ராஜ் படத்தொகுப்பாளராகவும், ஆல்பி ஒளிப்பதிவாளராகவும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.