Spotlightசினிமா

குடும்பங்கள் கொண்டாடும் தனுஷின் “நானே வருவேன்”…  திரையரங்குகளில் அதிகரிக்கும் காட்சிகள்!

யக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் நடிக்க கடந்த 29 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “நானே வருவேன்”.

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் வெளியானதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

படம் வெளியாகி, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ரசிகர்கள் அனைவரும் படத்தினை கொண்டாடினர்.

இப்படத்தில் தனுஷ் இரட்டைக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். வழக்கமான செல்வராகவன் ஜானர் படம் போல் அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் இப்படத்தை உருவாக்கியிருந்தார் செல்வராகவன்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வசூலிலும் போதுமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், குடும்பங்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி தின விடுமுறையில் தான் பட்ஜெட் படங்கள் வெளியாவதால், அதுவரை இப்படத்தின் கொண்டாட்டம் திரையரங்குகளில் இருக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button