
மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவண். இவர் அடுத்ததாக நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ரெளடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
வரும் வியாழன் முதல் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 90 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இத்திரைப்படத்தினை இடைவெளி இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதால் இடைவேளை இல்லாமல் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இடைவெளி இல்லாத இந்த படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
இதனால் ‘கனெக்ட்’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.