Spotlightசினிமா

விக்னேஷ் GS இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ”O2”!!

யன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்த வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2” திரைப்படத்தை வெளியிடவிருக்கிறது.

நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம் “O2”. படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close