Spotlightசினிமா

நேற்று இந்த நேரம் விமர்சனம் 3/5

சாய் ரோஷன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், ஹைரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், காவ்யா அமிரா, நிதின் ஆதித்யா, அரவிந்த், பாலா, செல்வா, கே ஆர் நவீன் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நேற்று இந்த நேரம்.

கெவின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஷால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை கோவிந்த் செய்திருக்கிறார்.

கதைக்குள் பயணப்படலாம்…

நான்கு ஆண் நண்பர்கள், மூன்று பெண் நண்பர்கள் இணைந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்த கேங்க்’ல் மூன்று ஜோடிகள் காதலர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஷாரிக் ப்ளே பாயாக இருக்கிறார். மூன்று பெண்களிடமுமே தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்.

அதன்பிறகு நாயகி ஹரிதாவை காதலிக்கிறார். அவருடன் சுற்றுகிறார். நாயகி ஹரிதா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதும், அதெல்லாம் முடியாது லிவிங் வாழ்க்கை வாழலாம் என்று கூறிவிடுகிறார் ஷாரிக்.

இதனால் நாயகி அதிர்ச்சியாகிறார். இந்த சூழலில் ஷாரிக் மறுநாள் காணாமல் போய்விடுகிறார்.

போலீஸ் விசாரணையை துவங்குகிறது… மற்றவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறது. விசாரணையின் முடிவு என்னவாக இருந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஷாரிக், ப்ளே பாய் கேரக்டருக்கு சரியான பொருத்தமாக வந்து செல்கிறார். முந்தைய படங்களை காட்டிலும், நடிப்பில் சற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகி ஹரிதா பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறா.

மற்ற கேரக்டர்களில் நடித்தவர்களும் அவரவர்களது காட்சியை நச்சென செய்து முடித்திருக்கின்றனர். ஊட்டியில் படப்பிடிப்பை வைத்துக் கொண்டு படத்தின் முக்கால்வாசி காட்சிகளை ஒரு வீட்டிற்குள்ளே வைத்து முடித்ததை ஏற்கமுடியவில்லைல்.

திரைக்கதையில் இன்னும் சற்று வேகத்தை ஏற்றி, ரசிகர்களை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் வாய்ப்பை இயக்குனர் சற்று நழுவ விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக வந்து நிற்கிறது.

கோடையில் ஒரு ஜாலியான ரைட் போக வேண்டும் என்றால் “நேற்று இந்த நேரம்” படத்திற்கு ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button