Spotlightசினிமா

அந்த நடிகருடன் ஒரு நிமிடம்… மனம் உருகும் சன் டிவி புகழ் அனிதா!

செய்தி வாசிப்பில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் அனிதா. அதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் அவ்வப்போது அனிதா தலைகாட்டி வருகிறார்.

சமூகவலைதளங்களில் அனிதா பிரபலமாக இருப்பதால் முக்கிய நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் அனிதா ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இதைப்போல் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திலும் அனிதாவிற்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் அனிதா சூர்யாவுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சூர்யாவுடன் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் வாய்ப்பு படப்பிடிப்பில் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த நிமிடங்களை தன் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறி கூறியுள்ளார் அளித்தார்.

சூர்யாவுடன் நடிப்பது குறித்து அனிதா கூறியுள்ள இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button