
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ளது ஜிப்ஸி. இப்படத்தினை அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும்போது, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மிகவும் நேர்மையான மனிதர். எம் எல் ஏ பதவியில் இருந்து கொண்டு மிகவும் எளிமையான பணியை செய்து கொண்டு வருகிறார்.
திரையில் மட்டுமே தான் ஒரு போராளி என்பதை நிரூபித்து வரும் இயக்குனர் ராஜு முருகன், விரைவில் சட்டசபை சென்று அங்கும் தான் ஒரு போராளி என்பதை நிரூபிக்க வேண்டும்.’ என்று கூறினார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Facebook Comments





