Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

தொழில் துவங்க 3 லட்சம் கோடி.. அடமானமாக சொத்துக்கள் காட்டத்தேவையில்லை… அதிரடி திட்டங்கள்!

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடிக்கான வரைமுறைகளை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதில், ‘சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி ஒதுக்கீடு

45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும்

12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ18,000 கோடி நிலுவை தொகை திருப்பி தரப்பட்டுள்ளது

வருமானவரி செலுத்துவோர் 14 லட்சம் பேர் ரீ பண்ட் நிலுவை தொகைகளை பெற்றுள்ளனர்

அம்சங்கள்:

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாதத்தை அரசு வழங்கும்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதன கடனாக ரூ20,000 கோடி வழங்கப்படும் .’

சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி,

சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்

வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.

நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்.

மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன.

பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது

உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன.

6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button