Spotlightசினிமா

’அவதார்’ படத்திற்காக ஒதுக்கப்பட்ட 7,500 கோடி!

டந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலக சினிமாவையே அதிர வைத்தது.

ஆஸ்கர் விருதுகளை வாரி குவித்தது. இதன் அடுத்த பாகத்தை தற்போதுஇயக்கி வருகிறார் இதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

படத்திற்கான பணிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் அறிவித்தபடி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் நிச்சயம் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பணிகள் தடைபட்டிருந்தாலும், வீட்டிலிருந்தே இதன் பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும், 2025ஆம் ஆண்டு டிசம்பரில் நான்காம் பாகமும், 5 ஆம் பாகம் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த பாகங்களை எடுக்க இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி ஆகும் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button