Spotlightசினிமா

சிலுக்குவார்பட்டி சிங்கத்துக்கு ஜோடியாகும் மான்ஸ்டர் நாயகி

விஷ்ணு விஷால் நடிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் அவரது நடிப்பில் உருவாகும் ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் 2 படங்களும் வரவேற்பை பெற்றது.

தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படம் விளையாட்டு சம்பந்தப்பட்ட குடும்ப படமாக உருவாகவுள்ளதாம்.

இந்த நிலையில், இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அண்மையில் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Vishnu Vishal and Priya Bhavani Shankar team up with Silukkuvarupatti Singam director

Facebook Comments

Related Articles

Back to top button