Spotlightவிமர்சனங்கள்

பவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம் 2/5

போக்குவரத்து விதிகளை பற்றிய பாடத்தில் பட்டயப்படிப்பு படித்திருக்கும் மாறன், டிராபிக் வார்டன் இருக்கிறார். போக்குவரத்து நெரிசலின் போது போலீசுக்கு உதவுகிறார்.

அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவை சந்திக்கிறார். சில காட்சிகளுக்கு பிறகு இருவரும் காதலிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தீஷாவின் சகோதரி தாரா அவர்கள் காதல் என்ற பெயரில் ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் சிக்குகிறார்.

எனவே அந்த காதலியின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார் மாறன்.

அதன்பின்னர் என்ன ஆனது,? தீஷா கரம் பிடித்தாரா? தாராவை காப்பாற்றினாரா? அந்த கும்பலை எப்படி மடக்கி பிடித்தார்? என்பதே மீதிக்கதை.

டாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

போக்குவரத்து விதிகள், டிராபிக் வார்டன் மற்றும் MSM என்ற புது விதிமுறைகளை பாடலாகவும் காட்சிகளாகவும் காட்டியுள்ளார் மாறன்.

ஆனால் இவரின் விக் வைத்த தலையையும் முகத்தையும் முழுமையாக க்ளோஸ் அப்பில் பாரக்க முடியவில்லை. அதை சரியாக செய்திருக்கலாம். அதுவும் ஒரு காட்சியில் அழுகிறார். நாம் எல்லாரும் சிரித்தே விடுவோம்.

இடைவேளைக்கு பின்னர் இளம் பெண்களை டார்கெட் செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றி சொல்லியுள்ளார்.

நிறைய விஷயங்களை சொன்னாலும் அதை சொன்ன விதம்தான் சரியில்லை. இயக்கத்தை மட்டும் பார்த்திருக்கலாம். முதல் படத்திலேயே நடிக்கவும் செய்து அதிலும் குறை வைத்து விட்டார்.

தீஷா மற்றும் தாரா என 2 நாயகிகள். தீஷா அழகாகவும் நடித்துள்ளார். தாரா நடிப்பு செயற்கையாக உள்ளது.

டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி அட்வைஸ் மழை பொழிகிறார். ஆனால் லஞ்சம் வாங்காத நல்ல போலீசாக நடித்துள்ளர்.

இவர்களுடன் மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். அவ்வளவுதான்.

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் தேவையில்லை.

பாலாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே என்றாலும் நாடகத்திற்கு ஏன் இவ்வளவு சிரமம்? என கேட்க வைத்துவிட்டார்.

ஆக மொத்தம்.. பச்சை விளக்கு.. பவர் இல்லாத விளக்கு

Pachai Vilakku review

Facebook Comments

Related Articles

Back to top button