Spotlightவிமர்சனங்கள்

பக்கிரி – விமர்சனம் 3/5

தென்னிந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்று நேரடியாக ஹீரோவாக களமிறங்கியவர் என்ற பெருமை தனுஷிற்கு உண்டு. ’The extraordinary journey of the fakir’ என்ற ஹாலிவுட் படத்த்டில் நடித்து தமிழனுக்கு பெருமை சேர்த்தவர் தனுஷ்.

இப்படத்தினை டப்ப்ங் செய்து, ‘பக்கிரி’ என்ற வாயிலாக தமிழில் இன்று வெளியாகியுள்ளது.

மும்பையில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். சிறுவயதிலிருந்தே அப்பா யார் என்று கூறாமல், தனது மகனை வளர்த்து வருகிறார். தனுஷிற்கு மேஜிக் மீது ஒரு அலாதி பிரியம் மட்டுமில்லாமல், அதை கற்றும் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் தனுஷின் அம்மா இறந்துவிட, அவரது தந்தை தனுஷின் அம்மாவிற்கு எழுதிய கடிதம் அவரிடம் கிடைக்க, தனது தந்தை பாரீஸில் இருப்பதை அறிந்து கொள்கிறார் தனுஷ்.

தனது அம்மாவின் அஸ்தியோடு, கையில் சிறிய அளவில் மட்டுமே பணத்தை வைத்துக் கொண்டு பாரீஸ்க்கு பயணம் செய்கிறார் தனுஷ்.

அங்கு, நாயகியாக வரும் எரின் மொரியார்டியை சந்திக்கிறார் தனுஷ். கண்டதும் அவர் மீது காதல் வயப்படுகிறார் தனுஷ். நாயகியும் தனுஷ் மீது ஒரு வகையான ஈர்ப்புக்கு உள்ளாகிறார்.

கையில் பணம் இல்லாததால், இரவில் ஒரு கடைக்குள் ஒரு பெட்டிக்குள் தங்கிவிடும் தனுஷ், அந்த பெட்டியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் போது, அப்பெட்டிக்குள் இருந்த தனுஷும் இங்கிலாந்திற்கு சென்று விடுகிறார்.

அங்கு, பல இன்னல்களை சந்திக்கும் தனுஷ் மீண்டும் நாயகியை சந்தித்தாரா..? அவரது காதல் கை கூடியதா..?? இல்லையா..??? தனது தந்தையை சந்தித்தாரா இல்லையா..???? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வரும் தனுஷ், தனக்கேற்ற நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். அதே துறுதுறுவென நடிப்பு, காமெடி என அவருக்கே உரித்தான அழகு நடிப்பை கொடுத்திருக்கிறார் ஹீரோ தனுஷ். ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு அவரது நடிப்பை குறையா கூற முடியும்.? தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக தான் பார்க்க முடியும்.

நாயகியாக வரும் எரின் மொரியார்டி, ஹாலிவுட் நாயகியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். பின்னனி இசை படத்திற்கு பலம்.

எளிதாக நாடு நாடாக பறந்து செல்லும் தனுஷ்.. இந்த லாஜிக் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை..

மற்றபடி ஹாலிவுட் படம் என்றில்லாமல், இந்திய சினிமாவாக தான் இருக்கிறது இந்த ‘பக்கிரி’

வின்செண்ட் மாத்தியாஸின் ஒளிப்பதிவு கலர்புல்..

பக்கிரி – உலகம் சுற்றும் வாலிபன்..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close