Spotlightசினிமாதமிழ்நாடு

78 வயதில் சிவகுமாரின் அசாத்திய சாதனை!!

லையுலகம் கண்டெடுத்த நடிகர்களில் மிகவும் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் சிவக்குமார்.

தமிழக மக்களை சினிமா என்ற கோட்டைக்குள் வரவழைத்து அவர்களை இப்படியும் நடிக்க முடியுமா என ஏங்க வைத்த நடிகரும் இவரே.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாகவே மாறி நடிப்புக்கு உயிர் கொடுப்பவர் நடிகர் சிவக்குமார்.

தனது 78 வயதிலும், அசராது யோகா கலையை தொடர்ந்து கடைபிடித்து வருபவர். யோகா கலையின் முக்கியத்துவத்தையும், தமிழ் அறிஞர்களின் நூல்களையும் இன்றைய இளைஞர்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று அவர்களை வியக்க வைப்பவர் ஐயா. திரு சிவக்குமார் அவர்கள் தான்.

சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் சிலர், இவரை என்ன வசைபாடினாலும், இவரின் கலை சாதனையை அவர்கள் இமயமலையை பார்ப்பது போல் தான் பார்க்க வேண்டும்.

யோகா தினமான இன்றும் தலைகீழாக நின்று யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு அறிய வைக்கிறார். இந்த வயதிலும் தான் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காரணம் யோகா தான் என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார் சிவக்குமார்.

காலம் போற்றும் கலையுலக பிரம்மாவை…

 

Facebook Comments

Related Articles

Back to top button