Spotlightசினிமாவிமர்சனங்கள்

பரிவர்த்தனை – விமர்சனம் 2.75/5

எஸ் மணிபாரதி இயக்கத்தில் சுர்ஜித், சுவாதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பரிவர்த்தனை”.

கதைப்படி,

கிராமத்தில் பால்காரர் ஒருவரின் மகனும் பண்ணையார் மகளும் காதலிக்கிறார். இது பள்ளி பருவ காதல். இந்த காதலை கண்ட பண்ணையார் பால்காரர் மகனை அடித்துவிடுகிறார்.

இதனால், அவமானப்பட்ட பால்காரர் தனது மகனை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

அங்கு, தனது மகனை படிக்க வைத்து மருத்துவராக்கி விடுகிறார் பால்காரர். அதுமட்டுமல்லாமல், மகனுக்காக ஒரு மருத்துமனையையும் கட்டி கொடுத்து விடுகிறார்.மகனின் விருப்பத்தை கேட்காமலேயே ஒரு பெண்ணையும்(சுவாதி) நாயகன் சுர்ஜித்திற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

மனதில் சிறுவயது காதலியை நினைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் சுர்ஜித், மனைவியாக சுவாதியை ஒருநாள் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து வேண்டா வெறுப்பாக வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில், தனது கல்லூரி தோழியான ராஜேஷ்வரியை காண கிராமத்திற்குச் செல்கிறார் சுவாதி. அப்போதுதான் தெரிகிறது தனது கணவன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் காதலி ராஜேஷ்வரி தான் என்று.

அதன் பிறகு சுவாதி என்ன முடிவெடுத்தார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருக்கிறார் சுர்ஜித். என்னதான் காதலியை நினைத்துக் கொண்டிருந்தாலும், தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை பெண்ணாக கூட மதிக்காமல் இருப்பவரையெல்லாம், ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நடித்த நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

பாக்யராஜ் அந்த 7 நாட்கள் படத்தில் ஒரு வசனம் பேசுவார், ”என்ற காதலி உங்க மனைவியாகலாம் பக்சே உன்ற மனைவி என்ற காதலி ஆக முடியாது” என கூறுவார். இந்த டயலாக்கையே படத்தின் உட்சபட்ச டயலாக்காக வைத்துள்ளார்கள்.

ஆங்காங்கே பல குறைகள் எட்டிப் பார்த்தாலும், காதல் என்ற ஒன்று அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது.

கோகுலின் ஒளிப்பதிவு பலம் , ரஷாந்த் அர்வின் இசை அருமை,
கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல் வரிகள் முனுமுனுக்க வைக்கின்றன. காலம் தாண்டினாலும் காதல் காதல்தானே என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த பரிவர்த்தனை – பாராட்டுதலுக்குறியது.

Facebook Comments

Related Articles

Back to top button