சினிமா

சிவராஜ்குமார்  – வெங்கட் கோனங்கி படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார்  தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில்   பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார்  இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா (Mandya) இமாச்சலப் பிரதேசம் ( Himachal Pradesh), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN Productions இந்தப் படத்தை தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான Wadeyar Movies மற்றும் வெங்கட் கோனங்கி (Venkat Konanki) தலைமையிலான KVN Productions  இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

சிவராஜ்குமார் நாயகனாக  நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக  உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே (Deshpande), பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi) போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ( Ajaneesh Loknath) இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் (Shashank Narayan) எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button