Spotlightசினிமாவிமர்சனங்கள்

பெல் – விமர்சனம் 2.75/5

யக்குனர் வெங்கட் புவன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், லேட் நிதிஷ் வீரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் தான் “பெல்”.

கதைப்படி,

மலைப்பிரதேசமான ஒரு காட்டில் சிலர் அடிபட்டும், சிலர் கொல்லப்பட்டும் கிடக்கிறார்கள். போலீஸார், அடிபட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

பின், அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். அந்த விசாரணைப்பிடியில் சிக்கிக் கொள்கிறார் ஸ்ரீதர் மாஸ்டர்.

கதை ஃப்ளாஷ் பேக் காட்சியாக நகர்கிறது. மனித உயிர்களைக் காக்கும் நிசம்ப சூதனி என்ற மூலிகையை கள்வர்களிடம் செல்லாமல் அதை காக்கும் பொறுப்பு ஸ்ரீதரிடம் இருக்கிறது.

அதை எப்படியாவது அடைய நினைக்கிறார் குரு சோமசுந்தரம். அந்த நிசம்பசூதனியை பல கோடிகளுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார் குரு சோம சுந்தரம்.

அதை அடைய பல கோணங்களில் தனது முயற்சியை எடுக்கிறார். அவரது முயற்சி என்னவானது.? இதற்கிடையில் ஸ்ரீதரின் காதல் என்னவானது.? நிசம்பசூதனி என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

தனக்கு ஏற்பட்டதை விளக்கும் ஸ்ரீதர், கண் பார்வையற்றவர் என்பதால், அவர் மனதில் சித்தரித்திருக்கும் காட்சியாக வருகிறார் நிதீஷ் வீரா.  தனது அனுபவ நடிப்பால் கவர்ந்திருந்தாலும், ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார் குரு சோம சுந்தரம்.

எனவே, கதையை காட்சி படுத்திய விதமும், திரைக்கதையும் சற்று குழப்பமாக அமைந்தாலும், மிகவும் ஒரு புதிய முயற்சி தான். இந்த முயற்சிக்காக படக்குழுவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

நிசம்பசூதனியின் மகத்துவம், அதைக் காப்பாற்றத் துடிக்கும் கதாநாயகன், அதைக் கைப்பற்றத் துடிக்கும் வில்லன், ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பனின் காதல் கதை, மலையில் நடந்த மரணங்களைப் பற்றி விசாரிக்கும் காவல் துறை என காட்சிகளை பரபரப்பாகவே கொண்டு சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவை இன்னும் சற்று மெனக்கெடல் கொடுத்து நன்றாகவே செய்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டாலும், எடுத்துக் கொண்ட மையக்கருவிற்காக பெல் நச்சென்று நகர்கிறது.

ராபர்ட் பின்னணி இசை கதையோடு பயணம் செய்துள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button