Spotlightசினிமா

ஜூன் மாதம் வெளியாகும் பவுடர் படத்தின் முதல் பாடல்!!

டிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், ரத்த தெறி தெறி எனும் முதல் பாடல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதே மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button