Spotlightசினிமா

ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்படும் ‘கடாரம் கொண்டான்’!

விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம்தான் ‘கடாரம் கொண்டான்’.

இப்படத்தில் விக்ரமின் லுக், அவரின் ஆக்‌ஷன், என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், படத்தினை ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், தென் மாவட்டங்களில் விக்ரமிற்கு மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் இருப்பதால், அங்கு இப்படத்தினை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

வசூல் ரீதியாகவும் இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் திரையிட்ட திரையரங்குகள் அனைத்தும் ஹவுஸ் புஃல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button