கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கியது கஜா புயல். இந்த கோரதாண்டவத்தில் சுமார் 7 மாவட்டஙகள் உருக்குலைந்தன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களது இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பரணி, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். காலம் காலமாக நமக்கு சோறுபோட்ட டெல்டா விவசாய மக்கள், உணவு குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவரகளது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க நம்மால் முயன்ற உதவிகளை செய்வோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Facebook Comments