Spotlightசினிமா

இதுலேயும் விளம்பரமா.?..ரஜினி மகளை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!!

சில தினங்களுக்கு முன் இந்திய அரசால் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.

ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரிவித்தனர்.

விருது பெற்ற கையோடு ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனது மனைவியோடு சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்று வந்தார் ரஜினிகாந்த்.

சென்னை வந்த அடுத்தநாளே உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நலமோடு இருப்பதாக சிலர் கூறினாலும், எந்த வித அப்டேட்டும் சரியாக வெளிவராத காரணத்தால் ரசிகர்கள் பலர் கண்ணீர் கடலில் மூழ்கினர்.

பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும் ரசிகர்களால் நடத்தப்பட்டது. இந்நிலையில் நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்.

வீடு திரும்பிய கையோடு, தான் நலமோடு வீடு திரும்பியதாக தகவல் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

அதை, தனது மகள் செளந்தர்யா தொடங்கிய “ஹுட்” சமூக வலைதளத்தில் இதை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

அதற்கு ரசிகர்கள் பலர், ரஜினிகாந்த மகள் செளந்தர்யா மீது பெரும் கோபத்தை கொப்பளித்து வருகின்றனர்.

மறுபிழைப்பு எடுத்து வந்திருக்கும் இந்நேரத்திலும் அவரை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். அவரை அப்பாவாக பார்க்காமல், ஒரு பிராண்டாக தான் பார்க்கிறார் செளந்தர்யா என்று பலரும் கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தால் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட சமூக வலைதளமான “ஹூட்” எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக மக்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close