
சில தினங்களுக்கு முன் இந்திய சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு தான் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவு.
அவரது இழப்பு ரசிகர்களை மட்டுமல்லாது பொது ஜனங்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
இல்லாதவர்களுக்கு தொடர்ந்து இயன்றதை கொடுத்த வந்த புனித் ராஜ்குமார், நடிகராக மட்டுமல்லாது ஒரு மகானாகவும் உயர்ந்து காணப்பட்டு வந்தார்.
பல பள்ளிகளை இலவசமாக நடத்தி வந்தார். பலருக்கு கல்வி உதவி புரிந்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் விஷால் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அது என்னவென்றால்,
புனித் ராஜ்குமாரால் நடத்தப்பட்டு வந்த பள்ளிகளில் பயின்று வந்த சுமார் 1800 குழந்தைகளின் கல்வி செலவினை அடுத்த வருடத்திலிருந்து தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் விஷால்.
இந்த ஒரு அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள எனிமி படத்தின் ப்ரோமோஷனிற்காக கர்நாடகா சென்ற விஷால், அங்கு இதனை அறிவித்தார்.
அந்த மனசு தான் கடவுள் விஷால் சார்..