காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் தினம் தினம் போராட்டங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார் கமல்ஹாசன்.
இன்று ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. ஏராளமான பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயிருக்கின்றனர்.
ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ள ரஜினிகாந்த், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்ற போதிலும் இந்த சூழ்நிலையில் ரஜினி எதுவும் செய்யவில்லை என்றால், அவருக்கு எதிராக தமிழகம் திரும்பக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக விரைவில் ஒரு பிரம்மாண்ட உண்ணாவிரத போராட்டத்தை ரஜினி நடத்துவார் என தகவல் கிடைத்துள்ளது.