பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது சல்மான் கான் என்றால் மிகையாகாது. இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் மற்றும் வசூல் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் 1998-ம் ஆண்டு இவர் மீது ஒரு மானை சுட்டதற்காக புகார் கொடுக்கப்பட்டது, அந்த புகாரை தொடர்ந்து சல்மான் கான் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
சுமார் 1998-ல் தொடங்கிய இந்த வழக்கு 20 வருடங்கள் கழித்து மான்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து போலீஸார் இவரை கைது செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது
Facebook Comments