Spotlightசினிமாதமிழ்நாடு

நதிகள் இணைப்பு யார் செய்கிறார்களோ அவர்களுக்கே வாக்களியுங்கள் – ரஜினியின் மறைமுக வேண்டுகோள்!

பாஜக ஒருவேலை ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பிற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!

ரஜினிகாந்த் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே தெரவித்து விட்டதாக கூறினார். மேலும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் நதிகள் இணைப்பிற்கு ஆணையம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நதிகள் இணைப்பு குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளேன். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம். அவர் பிரதமராக இருந்த போது அவரிடம் இது குறித்து பேசியுள்ளேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பகீரத யோஜனா என பெயர் வைக்கலாம் என அவரிடம் கூறினேன். இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.

வரும் தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுக்க போகின்றனர் என்பது தெரியவில்லை. ஒருவேலை மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதலில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகள் இணைக்கப்பட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடும். வறுமை ஒழியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும் என குறிப்பிட்டார்.

பின்னர் இது தேர்தல் நேரம், மிக முக்கியமான நேரம். இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்து விடைப்பெற்றார்.

இதற்கிடையில் வரும் மக்களவை தேர்தலில் கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு, எனது நிலைப்பாட்டை ஏற்கனவே கூறியுள்ளேன்.அதனை பெரிதுபடுத்தி, அவருடனான நட்பை கெடுத்துவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button