Spotlightவிமர்சனங்கள்

சாமி ஸ்கொயர் – விமர்சனம் (3/5)

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்தான் ‘சாமி’. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இதே கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்களுக்கிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை ஆறுச்சாமியாக வந்த விக்ரம் வதம் செய்ததை தொடர்ந்து கதை இரண்டாம் பாகத்தில் ஆரம்பமாகிறது. பெருமாள் பிச்சையின் மூன்று மகன்கள் (பாபி சிம்ஹா, ஜான் விஜய், சுந்தர்) தனது அப்பாவைத் தேடி இலங்கையில் இருந்து திருநெல்வேலி வருகின்றனர்.

தனது அப்பாவை இறந்ததை கண்டறிந்து திருநெல்வேலியை தனது கண்ட்ரோலில் கொண்டு வருகின்றனர் மூவரும். திண்டுக்கல் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அங்கு மனைவி ஐஸ்வர்யா ராஜேஷுடன்(முதல் பாகத்தில் த்ரிஷா கேரக்டர்) வாழ்ந்து வருகிறார்.

பெருமாள் பிச்சையின் மகன்கள் மூவரின் அட்டகாசம் திருநெல்வேலியை ஆட்டிப் படைக்க, மீண்டும் திருநெல்வேலிக்கு பயணம் ஆகிறார் ஆறுச்சாமி. அங்கு பாபி சிம்ஹா ஆறுச்சாமியாக வரும் விக்ரமையும்,கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராஜேஷையும் கொலை செய்து விடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் வயிற்றில் இருந்த குழந்தை தப்பிக்க கதை 28 வருடம் பயணித்து விடுகிறது. சர்வீஸ் தேர்வு படிப்பிற்காக ட்ரெய்ணிங்கில் மத்திய அமைச்சர் பிரபுவிடம் டெல்லியில் பணிபுரிகிறார் ராம்சாமியாக வரும் மகன் விக்ரம்.

ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்று வரும் ராம்சாமி விக்ரம், திருநெல்வேலிக்கு பணியமர்த்தப்படுகிறார். அதற்கு பிறகுதான் தெரிகிறது, தனது அப்பா ஆறுச்சாமியையும், தாய் ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது பாபி சிம்ஹாவும் மற்றும் அவரது சகோதரர்கள் என.

அண்ணன் தம்பி மூவரையும் பழி வாங்க திருநெல்வேலியில் ராம்சாமி விக்ரம் ஆடும் ஆட்டமே இப்படத்தின் க்ளைமேக்ஸ்..

மிகவும் மிரட்டலான, மாஸான காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார் விக்ரம். 15 வருடத்திற்கு முன் பார்த்த அதே சாமி விக்ரமை, மீண்டும் அதே முகத்தோடு, கம்பீரத்தோடு பார்ப்பது அழகு. அவரது ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா தான். ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளும் சிக்ஸர் அடித்துள்ளார் விக்ரம்.

கீர்த்தி சுரேஷ், விக்ரமுக்கு அழகான ஜோடியாக வந்து செல்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்’காக இருந்தாலும் வெறுக்கும்படியாக இல்லை. மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது ரோலை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வில்லனுக்கான கதாபாத்திரத்தில் மிரட்டியெடுத்திருக்கிறார் பாபி சிம்ஹா. டயலாக் டெலிவரி, பார்வை, என அனைத்திலும் வில்லனுக்கான ரோல் பெர்பெக்ட்.. அண்ணன்களாக வரும் ஜான் விஜய், சுந்தர் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தான்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்று சொன்னால் அது சூரி தான். காமெடி என்ற பெயரில் அனைவரையும் கோபத்தை வரவைத்து விடுகிறார். படத்தில் சூரியின் கதாபாத்திரம் இல்லாமல் இருந்தால் படம் நல்லாயிருக்குமே என்பது ரசிகர்களின் மனக்குமுறல்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் “மெட்ரோ ரெயிலு..’ பாடல் ரிப்பீட் மோட். பின்னனி இசை கதையோடு பயணித்து மிரட்டுகிறது. ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இயக்குனர் ஹரியின் பயணத்தில் இப்படமும் அவருக்கு ஒரு மகுடம் தான்.

சாமி ஸ்கொயர் – தொடரும் சாமியின் வேட்டை…

Facebook Comments

Related Articles

Back to top button