Spotlightசினிமா

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகரான ரிசா பாவா நேற்றிரவு உயிரிழந்தார். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்.

வில்லன் வேடங்களில் அதிகம் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்ற இவருக்கு இன் ஹரிகர் நகர் என்ற படம் பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

55 வயதாகும் இவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மலையாள சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button