Spotlightசினிமா

₹30 கோடி சம்பளம்… ‘கருப்பு 2’ வாய்ப்பு… ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த முடிவு என்ன?

‘கருப்பு’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநராக ஆர்.ஜே. பாலாஜிக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பல முன்னணி தயாரிப்பாளர்கள் ஆர்.ஜே. பாலாஜியை தங்களது படங்களை இயக்க அணுகி வருவதாகவும், இயக்குநராக அவருக்கு ₹30 கோடிக்கும் அதிகமான சம்பளம் வழங்க தயாராக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையே, ஆர்.ஜே. பாலாஜிக்கு பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், சூர்யாவின் பிரம்மாண்டமான ‘Suriya 50’ திரைப்படத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘கருப்பு 2’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பும் ஆர்.ஜே. பாலாஜிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது அடுத்த இயக்குநர் படம் குறித்து அவர் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தற்போது இயக்குநர் வாய்ப்புகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதை விட, ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள தனது நடிப்பு படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

‘கருப்பு’ வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த இயக்கம் பாலிவுட் படமாக இருக்குமா, ‘கருப்பு 2’ ஆக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button