Spotlightதமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி!

பொதுத்தேர்வையொட்டி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும் நிறுத்தி அவர்களை ஏற்றி செல்லவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு மையத்தை பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ” சேலம் மாவட்டத்தில் 40, 068 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதாகவும், தேர்வு பணிக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க 80க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் மற்றும் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு மையங்களை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழையும் அந்நியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மாணவ -மாணவிகள் ஷூ, பெல்ட், மொபைல்போன், எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும், நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker