
’கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தினை தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடி செலவில் தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக திஷா பதானியும் இணைந்திருக்கிறார்கள்.
8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். பீட்டர் ஹையின் சண்டைப் பயிற்சி அளிக்க இருக்கிறார். தேசிய விருது பெற்ற பலர் இப்படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.
ஏற்கெனவே, படத்தின் முன்னணி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.