Spotlightசினிமா

ஒரே ஆண்டில் ரூ.800 கோடி வசூல் பங்களிப்பு! சூர்யாவின் மிரட்டலான கம்பேக்!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா 2026-ம் ஆண்டில் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஆண்டில் சூர்யா நடித்த கருப்பு, விஸ்வநாதன் & சன்ஸ் மற்றும் சீன் திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபீஸுக்கு ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூல் பங்களிப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான ‘SCENE’ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருவதாகவும், இப்படம் ரூ.300 கோடி வசூலை எட்டினால், அவரது மொத்த வசூல் பங்களிப்பு ரூ.900 கோடியைத் தொடும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று ரூ.200 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தமிழ் நடிகர் என்ற சாதனையையும் சூர்யா படைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவின் இந்த அதிரடி கம்பேக், அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button