Spotlightசினிமா

பிறந்தநாளில் புதிய அவதாரம்! தயாரிப்பாளராக களமிறங்கிய சிபிராஜ்!

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிபிராஜ், தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் முதல் படமான ‘Production No.1’ திரைப்படத்தை, ‘ஜீப்ரா’ படத்தின் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதைக்களம், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button