
வாலு படத்தில் இணைந்து நடித்த போதே சிம்பு, ஹன்சிகா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த காதல் முடிவுக்கு வந்தது.
தற்போது சில வருடங்களுக்கு பிறகு ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சிம்பு.
யு.ஆர்.ஜமீல் இயக்க இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் சிம்பு – ஹன்சிகா இணைந்து காட்சியளிக்கும் ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் கவர்ந்துள்ளது.
இதற்கு முன்பே ஹன்சிகா சுருட்டு பிடிக்கும் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Simbu and Hanshika romance Maha poster goes viral
Facebook Comments





