
தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.
இவரும் நயன்தாராவும் நடித்திருந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. நயன் தாராவுக்கு யோகிபாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா இந்தப் படத்திலும் யோகிபாபுவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார்.
அடுத்து நயன்தாரா நடிக்கவுள்ள பேய் படம் ஒன்றில் யோகி பாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் கூறி இருக்கிறார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன் தாராவுக்காக சம்மதித்துவிட்டாராம்.