Spotlightசினிமா

தனுஷ் – சிவகார்த்திகேயன் நேரடி மோதல்!

தனுஷ் நடிப்பில் வரும் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது ”மாரி-2”. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருக்கிறார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

அதே தேதியில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ”கனா” திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

தனுஷிற்கு சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ வாய்க்கா தகராறு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இவர்களின் படங்கள் நேரடியாக மோதிக் கொள்வதால், இவர்களின் நட்பு வட்டாரம் மேலும் விரிசல் அடைவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது. 

மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ”சிலுக்குவார் பட்டி சிங்கம்” திரைப்படமும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீமத்துரை திரைப்படமும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆக, டிசம்பர் 20, 21 தேதிகளில் கோலிவுட்டை கதிகலங்க வைக்க நாலு திரைப்படங்கள் களமிறங்குகின்றன என்பதுதான் இப்போதைய தகவல்….

Facebook Comments

Related Articles

Back to top button