ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் ‘2.O’.
கடந்த மாதம் 29ஆம் தேதி பல நாடுகளில் இப்படம் வெளியிடப்பட்டது. வெறும் நான்கு நாட்களில் சுமார் 400 கோடி வசூலை வாரி எடுத்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில், இப்படம் 2019 மே மாதம் சைனாவில் சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாக இருக்கிறதாம். இதில் 47 ஆயிரம் ஸ்கிரீன்களில் 3டி காட்சிகளாக ஒளிபரப்பப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Facebook Comments