Spotlightவிமர்சனங்கள்

வடம் – விமர்சனம் 2.5/5

யக்கம்: கேந்திரன்

நடிகர்கள்: விமல், நட்ராஜ், முனிஷ்காந்த், சனஷ்கா ஸ்ரீ, ஆடுகளம் நரேன், இந்துமதி, பாலசரவணன், குட்டி புலி சரவணன், மதுசூதனன், தீபா ஷங்கர்,

ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார்

இசை: டி இமான்

தயாரிப்பு” ராஜசேகர்

கதைப்படி,

சிவகங்கை தான் படத்தின் கதைக்களம். ஆடுகளம் நரேனின் மகனாக வருகிறார் விமல். வட மஞ்சுவிரட்டு போட்டியில் பல வருடங்களாக விமல் குடும்பமே வெற்றி பெற்று வருகின்றனர். பல காளைகளை வளர்த்து வருகிறது இவர்களது குடும்பம். அதில், பாண்டி முனி என்ற காளையை வளர்த்து வரும் இவர்கள், அந்த காளை மீது அலாதி பிரியம் வைத்திருக்கின்றனர் இவரது குடும்பத்தினர்.

காளை என்பது நமது வீரம், அடையாளம் , நமது பெருமை என்று நினைத்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகை சனஷ்கா ஸ்ரீயுடன் பழக்கம் ஏற்படுகிறது விமலுக்கு. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

லோக்கல் ரெளடியான மதுசூதனன், விமலையும் நரேனையும் கொல்ல நினைக்கிறார். அது எதற்காக என்பதற்கு ஒரு ப்ளாஷ் பேக் செல்கிறது. இந்த சூழலில் ஒரு நாள் இரவு ஹீரோயின் விமலை தனிமையில் பேச அழைக்கிறார். அதை பயன்படுத்திக் கொண்ட மதுசூதனனின் தம்பி விமலை தீர்த்து கட்ட அங்கு அடியார்களோடு வருகிறார். விமல் அனைவரையும் அடித்து விரட்டுகள். அந்த சமயத்தில் தான் கதையில் மிகப்பெரும் ட்விஸ்ட் ஒன்று நடக்கிறது. அது என்ன .? விமல் அதனால் எதனை இழந்தார்.? ஹீரோயின் செய்தது என்ன.?? நட்டி எப்படி இந்த கதைக்குள் இருந்தார்.?? என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

வழக்கம்போல் விமல் கதைக்கேற்ற கதாநாயகனாகவே ஜொலித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். கலர் கலரான சட்டை, நெற்றியில் பச்சை கலர் போட்டு. முறுக்கு மீசை என தனது உடல் மொழியையும் கிராமத்து இளைஞனுக்கு ஏற்றாற்போல் மாற்றி அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

நாயகி சனஷ்கா ஸ்ரீ அழகு தேவதையாக படம் முழுவதும் காட்சி அளித்திருந்தார். பாடல் காட்சிகளில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் மட்டுமே வந்தாலும் தனது கேரக்டரை கதாபாத்திரத்தில் மிகச் சரியாக பொருத்தி அதனை வெற்றி அடைய செய்திருக்கிறார் நட்டி.

மதுசூதனமும் தனது பங்கிற்கு வில்லத்தனத்தை காட்டிவிட்டு சென்றிருக்கிறார். முனிஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை குறைவில்லாமல் செய்து முடித்திருக்கின்றனர்.

பல படங்களில் பார்த்த கதையே இப்படத்திலும் எட்டிப் பார்த்தது படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் ப்ளாஷ் பேக் சென்று கொண்டே இருந்தது எரிச்சலை வரவழைத்து விட்டது. ஒரு படத்துல அப்படி எத்தனை ப்ளாஷ் பேக் தான் வைத்திருப்பீர்கள் இயக்குனரே.??

ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்றே வைத்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர். போதும் போதும் என்ற அளவிற்கு தெகட்ட தெகட்ட கொடுத்துவிட்டார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை திரையரங்கில் உள்ள அனைவரும் எளிதாக யோகிக்கும் வண்ணம் கதையை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பின்னணி இசையில் இமான் வழக்கம்போல் அடித்து வம்சம் செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

வட மஞ்சுவிரட்டு காட்சிகளை இப்படி ஒரு ஒளிப்பதிவு யாரும் எந்த படத்திலும் காட்டியதில்லை. அப்படி ஒரு மிரட்டலான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கதை பலவீனமாக இருந்ததால் படத்தின் சுவாரஸ்யத்தை எதையும் ரசிக்க முடியவில்லை..

 பலவீனமான கதையால் பலவீனமாகியிருக்கிறது வடம்..

Facebook Comments

Related Articles

Back to top button