Spotlightசினிமா

படையெடுக்கும் குடும்பங்கள்… திரையரங்குகளுக்கு விருந்து கொடுத்த “விருமன்”!!

யக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விருமன்”.

இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.

படம் வெளியான நாள் முதல் குடும்ப ரசிகர்களிடையே நல்ல ஆதரவு பெற்றதால், தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது விருமன்.

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால், குடும்பத்தோடு திரையரங்கிற்கு சென்று படத்தினை கண்டுகளித்து வருகின்றனர் மக்கள்.

விருமன் திரையரங்குகளுக்கு கிடைத்த மாபெரும் விருந்து தான் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button