Spotlightஇந்தியாசினிமா

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்!

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவருக்கு வயது 54.

ஜுராசிக் வேர்ல்ட், தி ஜங்கிள் புக், தி அமேசிங் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர், நியூரோ எண்டாக்ரின் டியூமர் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button