Spotlightசினிமா

ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியில் கடுப்பான சன்னி லியோன்!

எம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் போட்டியாளர்கள் மத்தியில் திடீரென வெடித்த சர்ச்சை காரணமாக நடிகை சன்னி லியோன் கடுப்பாகி விட்டார். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த சன்னி லியோன் எம் டிவியில் இதற்கெல்லாம் இடமே இல்லை என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கி வரும் எம் டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் எனும் டேட்டிங் ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.

கவர்ச்சி கொஞ்சமும் குறைவில்லான பெண் போட்டியாளர்களும் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஆண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் குடிக்கிற டீயை போட்டியாளர் மேலே ஊற்றி சண்டையை மூட்டி விடும் வேலையை மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத் சிறப்பாகவே செய்து தனது திருவிளையாடலை அரங்கேற்ற அது இந்த வாரமும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டையையும் பொறாமையையும் ஏற்படுத்தியது.

அர்பாஸ் தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார் என்பதை கிசுகிசு டாஸ்க்கின் மூலம் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற காஷிஷ் அர்பாஸை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடும் முடிவுடன் அவரது இடத்துக்கு சென்றார். ஆனால், உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த அர்பாஸை பார்த்ததும் காஷிஷின் கோபம் சற்று தணிந்து விட்டது. அர்பாஸ் உண்மையாகவே உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என தெரியாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

அடுத்த நாள் புதிய டாஸ்க்கிற்காக குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் மற்றும் கிங் ஆஃப் ஹார்ட்ஸ் தனுஜ் விர்வானி வந்தனர். காஷிஷின் கோபம் கொஞ்சம் கூட குறையாமல் அவருக்குள் எரிந்துக் கொண்டே இருந்தது. எப்படி தேவையில்லாமல் டீயை தன் மீது அர்பாஸ் ஊற்றி தேவையற்ற வதந்திகளை பரவ விடலாம் இதுகுறித்து வெளிப்படையாக கேட்டு வெளுத்து வாங்க காத்துக் கொண்டிருந்தார். காஷிஷின் கோபத்தை புரிந்துக் கொண்ட சன்னி லியோன் அர்பாஸுக்கு தக்க பாடத்தை புகட்டி அவர் செய்தது சரியில்லை என்பதை உணர்த்தினார்.

அடுத்ததாக ’Qaid Mein Hai Bulbul’ டாஸ்க்கிற்காக அக்ரிதி ஜஷ்வந்த் உடன் டீம் சேர்ந்து விளையாடினார். மேலும், தன்னை எதிர்க்கும் பெண் போட்டியாளரை டார்கெட் செய்து விளையாட்டை விளையாடினார். சிறையில் அடைப்பட்டுக் கிடந்த பெண்களை அவர்கள் பார்ட்னர் விளையாடி காப்பாற்ற வேண்டும் என்பது போல ஆட்டம் ரொம்பவே டஃப்பாக இருந்தது. அந்த விளையாட்டில் ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி டீம் வெற்றிப் பெறாமல் ஷோபிகாவின் அணி வெற்றி பெற்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

போட்டியாளர்கள் அனைவரும் படு கவர்ச்சியான உடையில் இருந்த நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான சன்னி லியோன் மற்றும் தனுஜ் விர்வானியும் கவர்ச்சி கடலாக மாறி காட்சியளித்தனர். ஆட்டம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த நிலையில், வெடிகுண்டு ஒன்றை தூக்கிப் போட்டது போல உனாட்டியின் பேச்சு இருந்தது. அக்ரிதியை இந்த வாரம் எலிமினேட் செய்வதற்கு அனைத்து பிளான்களையும் ஹர்ஷ் செய்து வருகிறார் என கொளுத்திப் போட நிகழ்ச்சி சூடு பிடித்தது.

உனாட்டிக்கு நிகழ்ச்சிக்கு வெளியே தொடர்பு இருப்பதாக இஷிதா பற்ற வைத்த நிலையில், அவருக்கு ஆதரவாக நயேராவும் வந்து ஆமாம் உனாட்டிக்கு ஏகப்பட்ட கனெக்‌ஷன் இருக்கிறது என பேச ஆரம்பிக்க பெரிய பிரச்சனை அங்கே வெடித்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த சன்னி லியோன் கடுப்பான நிலையில், எம் டிவியில் இதுபோன்ற வேலைகளுக்கு இடமே இல்லை. இங்கே அனைத்து போட்டியாளர்களும் சமம் தான். பாலின வேறுபாடோ, மத ரீதியிலான பாகுபாடு உள்ளிட்ட எந்த ஏற்றத்தாழ்வும் நிகழ்ச்சிக்குள் இல்லை. அப்படி யாராவது தேவையில்லாத பிரச்சனையை கிளப்பினால் அவர்களை நானே அடுத்த முறை நேரடியாக நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என கடுமையாக எச்சரிக்க போட்டியாளர்கள் சன்னி லியோனின் இன்னொரு முகத்தை பார்த்து ஷாக் ஆகி விட்டனர்.

நண்பர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். நட்புக்குள் சண்டைகளும், நட்புக்காக சண்டைகளும் நிறைந்த எபிசோடாக புதிய எபிசோடு ஏகப்பட்ட உணர்ச்சிகளை ரசிகர்களுக்கு இந்த வாரம் கடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஓடிடியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஜியோ டிவியில் பார்க்கலாம். ஜியோ மற்றும் எம் டிவியில் தமிழிலும் இந்த டேட்டிங் ஷோ ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button