Spotlightஇந்தியா

இலங்கையில் தொடரும் போராட்டம்; போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

லங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இலங்கை ரம்புக்கனையில் போலீசாருக்கும் – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரம்புக்கனையில் போலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கேகாலை போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button