
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தபடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, இதோ ரஜினியுடன் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக இதில் அவர் வில்லனாக நடிப்பார் என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் கூறிவருகிறார்கள். இந்த வாய்ப்பு விஜய்சேதுபதியின் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Facebook Comments