சினிமா

கடனை திருப்பி கொடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம் லதா ரஜினிகாந்திற்கு உத்தரவு!

சவுந்தர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கோச்சடையான். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இப்படத்துக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ரூ.10 கோடி கடன் பெற்றது.

ஆனால் படத்தின் ரிலீஸ் உரிமையை வேறு நிறுவனத்திற்கு அளித்தது மட்டுமல்லாது, வாங்கிய பணத்தையும் திருப்பி தராததால் அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடனை திருப்பி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி குறிப்பிட்ட தொகையை லதா ரஜினிகாந்த் வழங்கினார். இந்நிலையில் மீதமுள்ள ரூ.80 லட்சத்தை வழங்குவது குறித்து லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து எஞ்சிய தொகையை ஜூலை 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button