
தமிழகத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் சீரான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊரகப் பகுதிகளுக்கு ரூ.50 கோடி, நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு ரூ.120 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.14 கோடி, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.16 கோடி என மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Facebook Comments