
கே ஜே ஆர் தயாரிப்பில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ, பூ ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘க/பெ ரணசிங்கம்’.
ஜீ ப்ளக்ஸில் இத்திரைப்படத்தினை 199 ரூபாய் தனியாக செலுத்தி பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் ‘க/பெ ரணசிங்கம்’ பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா, “அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான், பவானி ஸ்ரீ, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்”. என்று தெரிவித்துள்ளார்.





