
சில தினங்களுக்கு முன் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். சூர்யாவின் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனால், ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிலர், ரஜினி குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார். என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் சூர்யா மற்றும் ரஜினியின் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தை பாராளுமன்ற அவையில் முன் வைத்தார். அப்போது, ரஜினி, சூர்யா இருவரும் வெளிப்படையாகவே அமைச்சர்களால் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
இதோ அந்த வீடியோ..
புதிய கல்விக் கொள்கை குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்க சொல்கிறீர்களா?அல்லது ஆதரவு தெரிவிக்க சொல்கிறீர்களா? அதை ஏற்றுக் கொள்ளும் சகிப்பின் தன்மையும் இருப்பதை இந்த அவையில் உறுதி செய்யுங்கள் . #Surya #Rajini #NEP pic.twitter.com/XOK81QBtEq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 25, 2019