Spotlightசினிமா

’ஹீரோ’ சிவகார்த்திகேயனோடு மோத விரும்பாத சூர்யா!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று இறுதிகட்ட பணிகளில் உள்ளது. இப்படத்தினை ‘இறுதி சுற்று’ படத்தினை இயக்கிய சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.

என் ஜி கே , காப்பான் என வரிசையாக தோல்வியை தழுவி வரும் சூர்யாவிற்கு இப்படத்தினை வெற்றிப் பெற வைத்துவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்கு ‘சூரரை போற்று’படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், அதே தேதியில் மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் ‘ஹீரோ’ படம் வெளியாக உள்ளது.

இதனால், ’சூரரை போற்று’ படத்தினை அந்த தேதியில் இருந்து தள்ளி வைத்துள்ளார் சூர்யா.

சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button