
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்தில் படுபிஸியாக பணியாற்றி வருகிறது.
விஜய்யின் 64 படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
2020 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி தமிழ் சினிமாவில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.
‘தளபதி 65’ படத்தினை அநேகமாக வெற்றிமாறன் தான் இயக்குவார் என்ற செய்தி ஒன்று கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.
வெற்றிமாறனின் கதையை விஜய் ஓகே சொல்லியதாகவும், அடுத்தகட்ட பணிகளை வெற்றிமாறன் துவக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Facebook Comments





