
பீட்சா, சூது கவ்வும் என பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பில் சி வி குமார் தயாரித்திருந்தார்.
பிறகு இயக்கத்தின் பக்கம் தலைதிருப்பிய சி வி குமார், தனது முதல் படைப்பாக மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து தரப்பிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
தனது இரண்டாவது இயக்கமாக ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் சி வி குமார்.
இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பலரால் இந்த டீசர் பெரும் பாராட்டுக்குள்ளானது. குறிப்பாக ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினைப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தவர் இளம் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஆவார்.
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





