Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஜவான் – விமர்சனம் 3.5/5

நடிகர்கள்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி

இயக்கம் : அட்லீ

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: ஜிகே விஷ்ணு

ஆரம்ப காட்சியிலேயே ப்ரியாமணி உட்பட ஆறு பெண்கள் மெட்ரோ ரெயிலை பயணிகளோடு ஹை-ஜேக் செய்து விடுகின்றனர். இந்த பெண்களுக்கு தலைவனாக வருகிறார் ஷாருக்கான்.

பயணிகளை மீட்க, ஸ்பெஷல் போலீஸ் அதிகாரியாக வருகிறார் நயன்தாரா.

நாற்பதாயிரம் கோடியை கொடுத்தால் மட்டுமே பயணிகளை விடுவிப்பேன் என நிபந்தனை வைக்கிறார் ஷாருக்கான். அதுமட்டுமல்லாமல், அந்த ரயிலில் இல்-லீகல் தொழில் நடத்தி வரும் விஜய் சேதுபதியும் இருக்கிறார்.

தனது மகளுக்காக அந்த 40 ஆயிரம் கோடியை விஜய் சேதுபதியே கொடுத்து விடுகிறார். அந்த 40 ஆயிரம் கோடியை இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக கொண்டு சேர்த்து விடுகிறார் ஷாருக்கான்.

இதனால், மக்கள் மத்தியில் ஷாருக்கான் அடையாளம் தெரியாத ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

அதன்பிறகு தான் தெரிய வருகிறது, ஷாருக்கான் பெண்களுக்காக இருக்கும் சிறைச்சாலையின் ஜெயிலர் என்பதும், அங்கு வந்த ஆறு பெண்களும் ஜெயில் கைதிகள் என்பதும்.

விவசாயத்தை தொடர்ந்து அடுத்ததாக மருத்துவத்தில் கை வைக்கிறார் ஷாருக்கான். இதனால், தொழிலதிபரான விஜய் சேதுபதியின் பகையை வளர்த்துக் கொள்கிறார் ஷாருக்கான்.

ஒருகட்டத்தில் ஜெயிலரான ஷாருக்கான் விஜய் சேதுபதியின் கேங்-கிடம் சிக்கிக் கொள்ள, அப்போது எண்ட்ரீ ஆகிறார் அப்பா ஷாருக்கான்.

30 வருடங்களுக்கு முன் அப்பா ஷாருக்கானுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு பகை இருக்கிறது. அதற்கு பழி வாங்கும் விதமாக அப்பா – மகன் இருவரும் சேர்ந்து விஜய் சேதுபதியை அழித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக ஷாருக்கான், அதகளம் செய்திருக்கிறார். இரட்டை வேடங்களில் தாறுமாறான ஆக்‌ஷனை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் முதல் காட்சியியே ஆக்‌ஷனில் ஆரம்பிக்கிறது. வித்தியாசமான லைட்டிங், மேக்கிங் என ஆரம்பத்திலேயே நம்மை படத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகின்றனர்..

செம எனர்ஜியோடு ஆடி, ரசிகர்களை முழுவதுமாக திருப்திபடுத்தியிருக்கிறார் ஷாருக்கான்.. மொத்த கதையும் அவர் மீது பயணப்படுவதால் மிக கவனமாக கதையை நகர்த்தியிருக்கிறார் ஷாருக்.

அப்பா – மகன் இருவருக்குமான பாடி லேங்குவேஜில் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஷாருக்கான்.

நாயகியாக நயன்தாரா, வழக்கமான ஃபுல் எனர்ஜியோடு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷனிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் தனது நடிப்பின் உச்சத்தைக் கொடுத்திருக்கிறார் தீபிகா.

வில்லனாக விஜய் சேதுபதி, வழக்கமான தனது பாணியில் நடித்து மிரட்டியிருக்கிறார். இருந்தாலும், ஒரு நேரத்துல் ப்ளாக்& வொய்ட் தலைமுடியில் வரும் விஜய் சேதுபதி, அடுத்த காட்சியிலேயே முழுவதுமாக வெள்ளை தலைமுடியில் வருகிறார். பெரிய படங்களில் இதையெல்லாம் கவனிக்க மாட்டீர்களா.?? வில்லனுக்காக வெயிட்டேஜை இன்னும் சற்று அதிகமாக ஏற்றியிருந்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது ஸ்டண்ட் தான். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் நெருப்பு மாதிரி வேகம் கொடுத்து நம்மை பெரிதாகவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

அனிருத்தின் வந்த எடம் என் காடு பாடல் செம குத்து பாடலாக ஆட்டம் போட வைத்திருக்கிறது. விஷ்ணுவின் ஒளிப்பதிவு தனி மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளது.

விவசாயம், மருத்துவம், ராணுவம் என சமூக பிரச்சனையை கையில் எடுத்து அதை தன் பாணியில் இயக்கி ரசிகர்களுக்கு ஒரு படையலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ.

மொத்தத்தில்

ஜவான் – ஷாருக்கானின் ஆக்‌ஷன் மேஜிக்..

Facebook Comments

Related Articles

Back to top button